காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன நாள்: கிணத்துக்கடவில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி..!

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன நாள் தினத்தை முன்னிட்டு எம்.பி. கார்த்திக்சிதம்பரம் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாள் தின விழாவை இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வித்யாசாகர், கிணத்துக்கடவு வட்டார தலைவர் சிவராஜ், கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், வட்டார பொதுச்செயலாளர் அறிவொளி வெள்ளிங்கிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...