ஈஷா அவுட்ரீச் சார்பில் புதிதாக 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடக்கம் - பொள்ளாச்சி எம்.பி. தொடங்கி வைத்தார்

ஈஷா அவுட்ரீச் அமைப்பும், மத்திய வேளாண் துறையின் கீழ் இயங்கும் சிறு, குறு விவசாயிகள் கூட்டமைப்பும் இணைந்து ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவில் இரு உழவர் உற்பத்தி நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளனர்.



கோவை: ஈஷா அவுட்ரீச் (Isha Outreach) சார்பில் கோவை மாவட்டத்தில் புதிதாக 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இன்று (டிசம்பர் 28) தொடங்கப்பட்டன.



பொள்ளாச்சி ரோட்டரி ஹாலில் நடைபெற்ற விழாவில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், சண்முகசுந்தரம் பங்கேற்று இந்நிறுவனங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில், பொள்ளாச்சி மாவட்ட துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராஜ், சிந்தியா மருத்துவமனை தலைவர் டாக்டர்.வரதராஜன், தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி. கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

ஈஷா சார்பாக புதிதாக துவக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் குறித்த பேசிய பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்:-



ஈஷா அவுட்ரீச் அமைப்பும், மத்திய வேளாண் துறையின் கீழ் இயங்கும் சிறு, குறு விவசாயிகள் கூட்டமைப்பும் (Small Farmers Agri Consortium - SFAC) இணைந்து ஆனைமலையில் அருள்மிகு சோமேஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தையும், கிணத்துக்கடவில் ஸ்ரீ வேலாயுதசாமி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தையும் இன்று தொடங்கி இருக்கின்றன.



இந்த 2 நிறுவனங்களிலும் தலா 300 விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

விவசாயிகள் அதிகம் இருக்க கூடிய கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஈஷாவின் வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முன்னோடியாக இருந்துள்ளது. அதேபோல், இப்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த 2 நிறுவனங்களும் சிறப்பாக செயல்பட்டு, மேலும் பல உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன்மாதிரி நிறுவனங்களாக உருவெடுக்க வேண்டும்.

இந்தியாவில் 1970-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒரு விவசாயியிடம் சராசரியாக 2.3 ஹெக்டெர் விவசாய நிலம் இருந்தது. ஆனால், 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பில் அந்த அளவு 1.08 ஹெக்டராக குறைந்துள்ளது. இப்படி மிக குறைந்த நிலங்களை வைத்து கொண்டு விவசாயிகள் தனி தனியாக விவசாயம் செய்து லாபம் ஈட்டுவது மிகவும் சிரமம். அதற்கு பதிலாக ஆயிரம் விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கி, தங்கள் பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும். அத்துடன், தங்கள் பொருட்களை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.



2019-ம் ஆண்டு உலக சந்தையில் டி.ஏ.பி உரம் டன் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. ஆனால், தற்போது ஒரு டன் டி.ஏ.பி உரம் 1.20 லட்சமாக பன்மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. மத்திய அரசு கடந்த நிதியாண்டில் இயற்கை விவசாய மேம்பாட்டிற்காக ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. வரும் நிதியாண்டில் இது ரூ.10 ஆயிரம் கோடியாக உயர வாய்ப்புள்ளது. ஆகவே, விவசாயிகள் ரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற முன் வர வேண்டும்.

ஈஷா விவசாய இயக்கம் பல்வேறு பயிற்சி வகுப்புகள் மூலம் சுமார் 12 ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளித்துள்ளது பாராட்டுக்குரியது. விவசாயிகளின் நலனுக்காக சத்குரு அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளும் பாராட்டுக்குரியவை.

இவ்வாறு பொள்ளாச்சி எம்.பி. பேசினார்.



ஈஷா விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் திட்ட விளக்க உரையில் பேசிய போது, “விளைப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதும், விளைவித்த பொருட்களுக்கு லாபகரமான விலை பெறுவதும் தான் விவசாயிகளுக்கு இருக்கும் இரண்டு பெரிய சவால்கள். இந்த இரண்டிற்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தீர்வு அளிக்கிறது. மேலும், சொந்தமாக உரம் விற்பனை செய்வது, சொட்டு நீர் பாசனம் அமைப்பது, பல்வேறு வித விவசாய பயிற்சிகள் அளிப்பது போன்றவற்றின் மூலம் விவசாயிகளின் செலவுகள் குறைகிறது.

2013-ம் ஆண்டு ஈஷா அவுட்ரீச் தொடங்கிய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் பல்வேறு சவால்களை கடந்து தற்போது தமிழ்நாடு அளவில் முதல் இடத்திலும் இந்திய அளவில் 8-வது இடத்திலும் உள்ளது. முதல் ஆண்டில் ரூ.45 ஆயிரம் Turn over செய்த இந்நிறுவனம் தற்போது ரூ.14 கோடி Turn over செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது” என்றார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...