கோவையில் போளுவாம்பட்டி வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு யானைகள் கூட்டம்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை..!!

இரவு நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த தகவல்களை நேற்று போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் தங்களின் அறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளனர்.

கோவை வனக்கோட்ட வனப்பகுதிகளில் இருந்து வெளிவரும் காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து போளுவாம்பட்டி வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பில் கூறியதாவது:-

ஒற்றை காட்டு ஆண் யானை வெளியே வந்த விபரங்களில் போலுவாம்பட்டியில் ஆதிநாராயணன் கோவில் பகுதியில் ஒரு யானை வெளிவந்துள்ளது,

மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் உள்ள முந்திரி முடக்கு சரக பகுதியில் ஒரு யானை வந்துள்ளது. பெரியநாயக்கன் பாளையம் பகுதியில், கட்ட சாலை, திருமானூர் சாலை, அட்டி மாரியம்மன் கோவில் பகுதி என மூன்று இடங்களில் வந்துள்ளது,

கோவை வனச்சரகத்தில், மாங்கரை வன தணிக்கை நிலையத்தில் ஒரு யானை வந்துள்ளது. யானைகள் குழுவாக வெளியே வந்த விபரங்களின் அடிப்படையில், கோவை வனச்சரகத்தில் பாரதியார் யூனிவர்சிட்டி, வரப்பாளையம், லக்ஷ்மி நகர், மடத்தூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில், ஆண் யானைகள் 3, பெண் யானைகள் 12, குட்டி 5 என கூட்டமாக நான்கு இடங்களில் வந்துள்ளது.

காரமடை வனச்சரகத்தில் மேல்பாவி என்ற இடத்தில் ஆண் யானை 1, பெண் யானை 1 என இரு யானைகள் வந்துள்ளது. சிறுமுகை வனப்பகுதியில் கோவிந்தனூர், கருப்பராயன் கோவில் வீதி பகுதியில் ஆண் யானைகள் 7, பெண் யானைகள் 2 உலா வந்துள்ளது,

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மேற்கண்ட பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் விவசாயிகள், இரவு நேரங்களில் காவல் பணிபுரியும் நண்பர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்த்து மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல, இரவு நேரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் அந்தப் பகுதியில் இருக்கிறது என கேள்விப்பட்டால் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும், இரவில் வெளியே செல்லும் பொழுது கைவிளக்குகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் மக்கள் காட்டுயானைகளின் வழித்தடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் யானை நடமாட்டம் இருப்பின் அருகில் உள்ள வனப்பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...