நிரந்தரப் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பி.எஸ்.என்.எல் அதிகாரிகளின் கூட்டமைப்பு சங்கத்தினர், சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


கோவை: நிரந்தரப் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பி.எஸ்.என்.எல் அதிகாரிகளின் கூட்டமைப்பு சங்கத்தினர், சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.



அவர்களது கோரிக்கைகள்:-

1. தகுதியுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

2. மறுசீரமைப்பு உத்தரவுகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

3. JTO மற்றும் SDE சமமான கிரேடுகளுக்கு E2 மற்றும் E3 ஸ்டாண்டர்ட் PAY ஸ்கேல் செயல்படுத்த வேண்டும்.

4. DGM(T/F) பதவிகளுக்கும் ரெகுலர் DGM பதவி உயர்வு வழங்க வேண்டும்.

5. CAO பதவி உயர்வுக்கான தகுதி சேவையில் தளர்வு வைக்கவேண்டும்.

6. தற்காலிக பதவி உயர்வுகளை தவிர்த்து நிரந்தரப் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் நாடு தழுவிய தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...