கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா பறிமுதல்: 4-பேர் கைது

சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.


கோவை: இருவேறு இடங்களில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகத் தடைசெய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக ரகசியத் தகவல் கிடைத்தது.



அதன் அடிப்படையில் அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் நித்தியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அன்னூர் பசூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பரமக்குடியை சேர்ந்த அம்மாசி என்பவரது மகனான புலிக்குட்டி (எ) பாலமுருகன்(30) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர மகனந்தா என்பவரது மகனான லோக்நாத் மகனந்தா (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 6 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதேபோல், கோவை திருச்சி ரோடு சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிங்காநல்லூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று சோதனையிட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர்.

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒண்டிப்புதூர் சிவலிங்க புரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் தரணிதரன் 19, சூர்யா நகரைச் சேர்ந்த சாம் 20 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா ரூபாய் 2,300 மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவர்களே கஞ்சா விற்பனை செய்வது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...