கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் சேருதல், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தது, காவல்துறையிடம் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியது போன்ற 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி ஜெயராமன் மீது கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே கோதவாடி பகுதியில் உள்ள குளம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதை அடுத்து அங்கு நடந்த பொங்கல் விழாவிற்கு சென்ற பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அதிமுக - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கோதவாடி குளம் பகுதியில் நடந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க குருநல்லிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கோதவாடி அதிமுக கிளை செயலாளர் விநாயக மூர்த்தி, ஒன்றிய செயலாளர் பாப்பு (எ) திருநாவுக்கரசு உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.