வீட்டில் தனியாக வசித்து வருபவரிடம் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்து 3.5 பவுன் நகையை பறித்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
கோவை: கோவையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரிடம் இருந்து 3.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (84) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவரின் வீட்டிற்கு கடந்த 13ம் தேதி மர்ம நபர் ஒருவர் வந்தார். திடீரென அந்த நபர் சொக்கலிங்கத்திடம், முகவரி கேட்பது போல பேச்சுக் கொடுத்து 3.5 பவுன் நகையை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, புகாரின்பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அதில் நகையை பறித்துச் சென்றது நியூசித்தாபுதூர், வெங்கடசாமி ரோட்டை சேர்ந்த கண்ணன் (43) என்பது தெரிந்து கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரிடம் இருந்து 3.5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.