கோவையில் ரேக்ளா பந்தயம்... சீறிப்பாய்ந்த காளைகள்..!

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் நடைபெற்ற ரேக்ளா போட்டியில், வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி புல்லட் பைக், தங்க நாணயம் பரிசு வழங்கினார்.


கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி புல்லட்பைக், தங்க நாணயம் பரிசு வழங்கினார்.

கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்பிறந்த நாளையொட்டி நடந்த நேற்று ஒத்தகால்மண்டபத்தில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் இரட்டை மாடிகளுடன் கூடிய வண்டிகள் 200, 300 மீட்டர் என இரு பிரிவுகளின் இலக்கை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்தன.

பொள்ளாச்சி, வெள்ளலூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் என மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், 500-க்கும் மேற்பட்ட காளைகள் பந்தயத்தில் பங்கேற்றன.

இதில், 200 மீட்டர் பிரிவில், 'நெ.10முத்தூர்' பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், தொண்டாமுத்துார் கதிர்வேல், வீரப்பனூரை சேர்ந்த அன்பு தினேஷ்ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

300 மீட்டர் பிரிவில், தனசேகர், ராசு மற்றும் குருபிரகாஷ் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் வெற்றி வெற்றி பெற்றனர். இவர்களுக்கு புல்லட், பைக் மற்றும் ஒரு சவரன் தங்க நாணயத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.



நான்கு முதல், 10 வரையிலான இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயமும், 11 முதல், 20 வரையான , இடங்களுக்குக் கோப்பையும் வழங்கப்பட்டது.



கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கார்த்திக், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமதுயாசின் உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...