கோவை மதுக்கரை அருகே சேவல் திருடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை..!

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான சபீர் மற்றும் அவருடைய நண்பர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே சேவல் திருட்டு தகராறில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த மதுக்கரை பாலமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சிந்து (52), இவரது மகன் விஜய் (23), இவர் ஒரு பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் மதுக்கரையைச் சேர்ந்த சபீர் (24), என்பவரிடம் சண்டை சேவல் ஒன்றை திருடி, அதை விஜய்யிடம் கொடுத்து விற்பனை செய்ததாக தெரிகிறது.

இது சபீருக்கு தெரிந்ததும் அவரிடம் சென்று திருடிய சேவலுக்கு பணத்தை கேட்டுள்ளார். இதனால் விஜய் ஒரு சேவலை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இது போன்று பல சேவல்கள் மாயமாய் இருப்பதால் அதற்கும் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று சபீர் விஜய்யிடம் கேட்டுள்ளார்.

அதற்கு விஜய் பல சேவல்கள் மாயமாகி இருப்பதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசி தீர்வு காணலாம் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, மதுக்கரை அருகே உள்ள தனியார் நிறுவனம் அருகே சபீர் தனது நண்பர்களுடன் காத்திருந்தார். அப்போது, அங்கு விஜய் மற்றும் சபீர்க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த சபீர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயை குத்திவிட்டு தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சபீர் மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...