மேலும், ஆற்று கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணை 15வது முறையாக நிரம்பியதால் 11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதியான அப்பர் ஆழியாரில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு வினாடிக்கு 2400 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஆழியாறு அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதனால், அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக 2400 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், ஆற்றுக் கரையோரம் உள்ள பொதுமக்கள் யாரும் ஆற்றுப் பகுதிக்கு ஆடு மாடு மேய்க்க மற்றும் துணி துவைக்க செல்ல வேண்டாம் என பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.