கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கனமழையால் சங்கனூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழிகள் உருவாகி மழை நீர் தேங்கியது. இந்த பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கனமழையால் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழிகள் உருவாகி அந்த குழிகளில் மழை நீர் தேங்கிய பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், அனைத்து பேருந்துகளும்இரத்தினபுரி, சங்கனூர் முதல் நல்லாம்பாளையம் பிரதான சாலையில் சென்று வருகின்றது.
இதனால் இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது, மேலும் இந்த பகுதியில், கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கனமழையால் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழிகள் உருவாகி அந்த குழிகளில் மழை நீர் தேங்கி, இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர்.
தொடர்கதையாக நடைபெற்று வரும் இந்த சாலை விபத்துகளைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பகுதிகளில், கடத்தல் மண், மற்றும்கட்டிடக் கழிவுகளைக் கொண்டு குழிகளைச் சமம் செய்து விபத்தைத் தடுக்க வேண்டும் என்று, பலமுறை மனுக்களும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதமாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று, இந்த பகுதியில், கண்ணப்பநகர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் லிங்கம், பொது செயலாளர் விஆர் வேலுமயில் தலைமையில், தேங்கிய மழைநீரில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நாற்றுக்களை நட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.