சிக்கலாம்பாளையத்தில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் லாட்டரி சீடடு விற்பனை செய்தவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று சிக்கலாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, புகையிலை பாக்கெட் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த லிங்கராஜ் (25) என்ற வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.