இன்று முதல் 15 தினங்களுக்கு மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்காமல் கிராமப் புற விளையாட்டுகள், பாடல், நடனம் ஆகியவை கற்றுத்தர இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1882 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு இனிப்பு, பரிசுப் பொருட்கள் வழங்கி பேண்ட் வாத்தியங்களுடன் வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 19 மாதங்களுக்குப் பிறகு இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் துவங்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அதனடிப்படையில், இன்று திருப்பூரில் 1882 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான இன்று மாணவ-மாணவிகளை உற்சாகமாக வரவேற்கும் வகையில் பொம்மை வேடமிட்டு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு கடலைமிட்டாய், காகிதத்தால் செய்யப்பட்ட பூங்கொத்து பரிசுப் பொருட்கள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

மேலும், மாணவ மாணவிகளுக்கு உற்சாகமூட்டக் கூடிய வகையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாணவ, மாணவிகளை வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர்.
இன்று முதல் 15 தினங்களுக்கு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் எடுக்காமல் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் கிராம புற விளையாட்டுகள் மற்றும் பாடல், நடனம் ஆகியவை கற்றுத்தர இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.