திருப்பூர் நல்லூர் பொன்முத்து நகர் அருகே ரூ.1.40 கோடி மதிப்பிலான 25 வருட ஆக்கிரமிப்பு வழித்தடம் மீட்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி..!

25 வருடம் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டதால் அப்பகுதி மக்கள் சந்தோஷத்தில் கைகளை தட்டி மகிழ்ச்சியடைந்து அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


திருப்பூர்: நல்லூர் பொன்முத்து நகர் அருகே 1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 25 வருட வழித்தடம் ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் தெற்கு வட்டம், நல்லூரில் இருந்து முத்தணம்பாளையம், வாய்க்கால் மேடு செல்லும் வழியில் தனியார் திருமண மண்டபம் எதிரில் உள்ள மெயின் ரோட்டில் இருந்து மேற்கே உள்ள இடத்தில் அந்த காலத்தில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வண்டி தடம் இருந்துள்ளது.

அதனை அருகில் உள்ள கட்டுக்கார் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வண்டி தடம் முழுவதையும் ஆக்கிரமித்து தன் காட்டுடன் இணைத்து கம்பி வேலி அமைத்து கதவு வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். அப்பகுதியில் பொன்முத்து நகர் உருவானது.

மேலும், 5,6,7,8வது வீதி அடங்கிய தெற்கு பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இடம் வாங்குவதற்கு முன்பிருந்து வடக்கில் இருந்து தெற்கே 13 1/2 அடி அகலத்தில் கிழக்கில் இருந்து மேற்கே 600 அடி நீளத்தில் வண்டி தடம் 14 1/4 சென்ட் நிலம் இருந்துள்ளது.

அதனை அருகில் வசித்து வரும் சுப்பராயக்கவுண்டர் மகன் எஸ்.எஸ். நாச்சிமுத்து என்பவர் இடத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்து உரிமை கொண்டாடி வந்துள்ளார். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் செந்தில்குமார் என்பவர் வட்டாட்சியருக்கும், வருவாய் அலுவலர்களுக்கும் வழித்தடத்தை மீட்டு தரும்படி கடந்த வருடம் மனு அளித்துள்ளார்.

அதன்படி வட்டாட்சியர், வருவாய் துறையினர் பார்வைக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். அதில் அப்பகுதியில் வண்டி தடம் இருந்தது உறுதி செய்யப்பட்டு, கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ள இடத்தை அகற்ற கால அவகாசம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஆக்கிரமித்துள்ள இடத்தில் விவசாயம் செய்வதற்காக டிராக்டர் வரவழைக்கப்பட்டு உழவு ஒட்டியுள்ளார். மீண்டும் தாசில்தாரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.



மேலும், ஆக்கிரமித்துள்ள இடத்தை அகற்றக் கோரி தாசில்தார் கூறி ஒருமாத காலம் ஆகியும், ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை அரசு ஆவணத்தில் வண்டி தடம் உள்ளதை அக்கிரமித்துள்ளதை கண்டித்து வழித் தடத்தை தனியாரிடம் இருந்து மீட்டு தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட சம்பவ இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடினர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த திருப்பூர் தெற்கு தாசில்தார் ராஜ்குமார், தெற்கு சர்வேயர் சகாயம், நல்லூர் வருவாய் ஆய்வாளர் பத்மபிரியா, உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள இடத்தை அளவீடு செய்தனர். அதில் 14 1/4 சென்ட், 1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.

அப்போது, நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளந்து கல் நாட்டினர்.



இதையடுத்து, பொதுமக்கள் சார்பில் பொக்லின் இயந்திரம் வரவழைக்கப்பட்டு வழித் தடத்தை சுத்தம் செய்தனர். 25 வருடம் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டதால் அப்பகுதி மக்கள் சந்தோஷத்தில் கைகளை தட்டி மகிழ்ச்சியடைந்து அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...