மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்த நிலையில் கிணத்துக்கடவு ரயில் நிலையம் திடீர் மூடல் - ஊழியர்கள் வேறு இடத்திற்கு மாற்றம்..!!

தற்போது ரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அலுவலகங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.


கோவை: மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்த நிலையில் கிணத்துக்கடவு ரயில் நிலையம் திடீர் மூடல் ஊழியர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று தற்போது பணிகள் முடிவடைந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்யப்பட்டு சரக்குப் போக்குவரத்து தொடங்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கிணத்துக்கடவு ரயில் நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்த ரயில் நிலைய அதிகாரி உட்பட நான்கு பேர் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அலுவலகங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.



மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென கிணத்துக்கடவு ரயில் நிலையம் மூடப்பட்டு இருப்பது ரயில் பயணிகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...