வால்பாறையில் கலைஞரின் 'வருமுன் காப்போம்' திட்ட சிறப்பு முகாம்.!!

வால்பாறையில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிறப்பு திட்டமான வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு முகாம் வால்பாறையில் நடைபெற்றது.


வால்பாறை:கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிறப்பு திட்டமான வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு முகாம் வால்பாறையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மருத்துவர் அருணா அவர்கள் தலைமை தாங்கினார். இந்த சிறப்பு முகாமை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.



நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பேசும்போது, வால்பாறை அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக பேசிய கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் மருத்துவர் வரதராஜன் இப்பகுதியில் பெண்களுக்கான மார்பக புற்று நோய்த் தடுப்புக்கான தடுப்பு நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மேல்சிகிச்சைக்காககீழே அனுப்புவதைத் தவிர்க்கவும் இங்கேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த சிறப்பு முகாமில்பொது மருத்துவம், கண் காது மூக்கு தொண்டை, மகப்பேறு, இருதய நோய், தோல், எலும்பு முறிவு, சித்த மருத்துவம் மற்றும் இயற்கை வைத்திய மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.

அதற்கான மாத்திரை மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மேல் சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்குக் கோவை அரசு மருத்துவ மனையில் இலவசமாகச் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த சிறப்பு முகாமில் கோவை மருத்துவ இணை இயக்குனர் மருத்துவர் அருணா பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் முரளிதரன், கோவை திமுக தெற்கு மாவட்டச் செயலர் மருத்துவர் வரதராஜன், நகர பொறுப்பாளர் பால்பாண்டி, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது, துணைத்தலைவர் மயில் கணேசன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், நகரமன்ற உறுப்பினர் செல்வம், ஜே பி ஆர் பாஸ்கரன், மகுடீஸ்வரன், வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள்நவரத்தின ராஜன், மகேஷ் ஆனந்தி, சுரேந்திரன் இப்படி பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் திமுக MP மற்றும் அதிமுக MLA. நிர்வாகிகள் பிரமுகர்கள் கலந்து கொண்டது பொது மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...