பொள்ளாச்சியில் 16-வயது சிறுமிக்கு 26-வயது வாலிபருடன் திருமணம் – தடுத்து நிறுத்திய அதிகாரிகள்.!!

கோவை: பொள்ளாச்சி அருகே 16-வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே 16-வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26-வயது இளைஞருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி(57) என்ற விவசாயியின் 16-வயது மகளுக்கும் இன்று திருமணம் நடப்பதாக, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சமூக நலத்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கோமங்கலம் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இதையடுத்து, இரு தரப்பு பெற்றோர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில், 16-வயது சிறுமிக்குத் திருமணம் நடத்தப்பட இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், 18-வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வது, தண்டனைக்குரிய குற்றம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, திருமணத்தை நிறுத்தினர்.

மேலும் சிறுமிக்கு 18-வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்ய மாட்டோம் என்றும் கைப்பட எழுத்துப்பூர்வமாகப் பெற்றோர்களிடம் அதிகாரிகள் எழுதி வாங்கினர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...