கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று காலை முதல் தொலை தொடர்பு சேவை மற்றும் இணைய சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக,
வால்பாறையில் வங்கிப் பணிகள் மற்றும் இ-சேவை மையங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களது மாத ஊதியத்தை ஏ.டி.எம் மூலம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், ஆதார் கார்டுகளில் பெயர் மாற்றம், வயது மாற்றம், ரேஷன் கார்டுகளில் பணிகள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும், பள்ளி குழந்தைகள் இணையவழி கல்வியைப் பெற முடியாமலும் பாதிப்படைந்துள்ளனர். வங்கிப் பணிகள் எதுவும் நடைபெறாத காரணத்தால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். வால்பாறை பகுதியில் அடிக்கடி இணைய சேவைகள் பாதிப்படைவது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, வால்பாறை பகுதிக்கு தடையற்ற இணையவழி சேவையை அளிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.