கோவை: கோவையில் பிரசவ வலியால் துடித்த வடமாநில பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கோவையில் நேற்று சுந்தராபுரம் காமராஜர் நகர் பகுதியில் இருந்து வாயோ என்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவர் தன்னுடைய மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்று ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ் மற்றும் அவசரகால மருத்துவ நிபுணர் கண்ணன் ஆகியோர் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றனர்.
அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி அழைத்து வர முயன்றனர். பிரசவ வலி அதிகமானதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், அவசர சூழ்நிலையை கருதி சிறப்பாக செயல்பட்டு பிரசவம் பார்த்த சுரேஷ் மற்றும் கண்ணன் அவர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பின்னர், தாயையும் சேயையும் கோவை அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.