கோவை: கோவை குறிச்சி குளக்கரை பகுதியில் 275 வீடுகளுக்கு நோட்டீஸ், 70 ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளில் இடித்து அகற்றம்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி குளக்கரை பகுதியில் ரூ.52 கோடி மதிப்பில் ஸ்மார்ட் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதில், 70 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும், 275 வீடுகளுக்கு வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள்கூறுகையில், 'குறிச்சி குளக்கரை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் சதாம் நகரில் உள்ள 95 ஆக்கிரமிப்பு வீடுகளில், 70 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 25 வீடுகள் அடுத்த வாரம் இடிக்கப்பட உள்ளன. அதே போல், திருவள்ளுவர் நகரில் உள்ள 180 வீடுகள், காந்தி நகரில் உள்ள 95 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டீஸ் வழங்கப்பட்ட வீடுகள் வரும் 27ம் தேதிக்குள் காலி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. 28ம் தேதி முதல் வீடுகளை இடிக்கும் பணிகள் மீண்டும் நடைபெறும்,' என்றார்.