வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்காமல் அழக்களிப்பு.!!

கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்காமல் அழக்களிக்கப்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்காமல் அழக்களிக்கப்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் மருத்துவச் சிகிச்சைக்காக முக்கிய மருத்துவமனையாக சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வால்பாறை அரசு மருத்துவமனை இருந்து வருகிறது.

இந்த மருத்துவமனையில் தற்போது போதிய மருத்துவர்கள் இருந்தும் சமையலர், இரவு காவலர் உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கடந்த பல ஆண்டு காலமாக பணியில் அமர்த்தப்படாமல் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர்.

இதனால் நோயாளிகள் தொடர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் இது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரையிலும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களும் பலமுறை புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளாமலே காலம் கடந்து இதே நிலை நீடித்து வருகிறது.

மேலும் கடந்த பல மாதங்களாக மருத்துவமனையிலுள்ள உள்ள நோயாளிகளுக்குச் சமைத்து உணவு வழங்க முடியாத நிலையில் தினந்தோறும் யாராவது நல்ல உள்ளம் கொண்டவர்கள் நோயாளிகளுக்குக் காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் கடையில் காசு கொடுத்து உணவு வாங்கி வழங்கி வருவதாகவும், இதனால் சில நேரங்களில் தாமதமாக உணவு வழங்கும்போது மருத்துவர்களுடன் பொதுமக்களும் நோயாளிகளும் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலையும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் வால்பாறை பகுதி ஒட்டு மொத்த மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போதிய பணியாளர்களைத் தாமதமின்றி பணியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...