மளிகை கடைக்காரர் வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு.!!

கோவை: கோவை அருகே மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வரக்கூடிய வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.


கோவை: கோவை அருகே மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வரக்கூடிய வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை நீலம்பூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மனைவி கிருஷ்ணா வயது 39, இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவர் வீட்டைப் பூட்டி விட்டு பீளமேட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.

பின்னர் மாலையில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4-பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கிருஷ்ணா குமாரி சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். காவல்துறை மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டிற்குச் சென்று அங்குப் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...