கோவை: கோவை மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் தொடர்பாக 2-பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவில் பெண்களுக்கு 19-வயதும் ஆண்களுக்கு 21-வயதும் திருமணத்திற்கான சட்ட பூர்வ வயதாக உள்ளது. இந்த வயதுகளின் கீழ் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறும் செயலாகக் கருதப்படுகிறது. குழந்தை திருமணம் நடத்துவோர் மற்றும் ஊக்குவிப்பவர்களுக்கு சட்டப்படி தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் சைல்டு லைன் மூலம் குழந்தை திருமணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட மதுக்கரை வட்டாரம் வெள்ளலூர் பகுதியைச் சார்ந்த நேதாஜி மற்றும் கருமத்தம் பட்டி குளத்துப்பாளையம்
கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (எ) பழனிசாமி ஆகிய 2 நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மீது சமூகநலத்துறை மூலம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காரமடை ஊராட்சி மருதூர் கிராமத்தைச் சேர்ந்த புஷ்ப ராஜ் என்பவர் மீதும் சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் தொடர்பாகப் புகார் அளிக்க 1098 என்கிற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.