வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம் கோவிலை இடித்து சேதம்.!!

வால்பாறை: வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம் கோவிலை இடித்து சேதப்படுத்தியுள்ளது.


வால்பாறை: வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம் கோவிலை இடித்து சேதப்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் தற்போது சுற்றித் திரிந்து வருகின்றன.



இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள சின்கோனா பத்தாம் பாத்தி பி மாஸ்டர் பகுதியில் நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் புகுந்த மூன்று காட்டுயானைகள் அங்குள்ள மாரியம்மன் கோவில், சுவற்றை இடித்துத் தள்ளி உள்ளே புகுந்து கோவில் பொருட்களை இழுத்துத் தள்ளிச் சேதப்படுத்தியுள்ளது.

அதைத்தொடர்ந்து, அருகே உள்ள ஒரு குடியிருப்பையும் சேதப்படுத்திய நிலையில், சத்தம்கேட்டு எழுந்த அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதியில், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்குத் தகவல் அளிக்க முடியாமல் பொதுமக்களே யானைகளை விரட்டியுள்ளனர்.

மேலும் வால்பாறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அவசரக்காலத்திற்குக் கூட தொலைப்பேசியைத் தொடர்பு கொள்ளமுடியாத நிலை தொடர்வதால் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தொடர்பைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...