வால்பாறையில் கஞ்சா விற்ற நபர் கைது.!! 3.700 கிலோ கஞ்சா பறிமுதல்.!!

வால்பாறை: வால்பாறையில் கஞ்சா விற்ற நபர் கைது 3.700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


வால்பாறை: வால்பாறையில் கஞ்சா விற்ற நபர் கைது 3.700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கஞ்சா விற்பதாகக் காவல் துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், பாலாஜி மற்றும் காவல்துறையினர் நகரம் மற்றும் தேயிலைத் தோட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்பொழுது புதுத்தோட்டம் எஸ்டேட்டில் 10 ஏக்கர் பகுதியில் புதுத் தோட்டம் எஸ்டேட்டை சேர்ந்த யேசு வயது 52. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் விற்பனைக்குக் கையில் வைத்திருந்த இரண்டு 100 கிராம் கஞ்சா கைப்பற்றப் பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் சோதனையிட்ட போது 3.500 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து யேசு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விசாரணைக்குப் பின் வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் அவினாசி கிளை சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். வால்பாறையில் கஞ்சா கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் வால்பாறையில் தீவிர ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...