கோவையில் இஸ்லாமியர்களை குறிவைத்து நடைபெறும் சட்டவிரோத விசாரணையை தடுக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் மனு!

கோவை: கோவையில் இஸ்லாமியர்களை குறிவைத்து நடைபெற்று கொண்டிருக்கும் சட்டவிரோத விசாரணையை தடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இஸ்லாமியர்களை குறிவைத்து நடைபெற்று கொண்டிருக்கும் சட்டவிரோத விசாரணையை தடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில்,



கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விசாரணை என்ற பெயரில் காவல்துறை அதிகாரிகளால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அச்சுறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விசாரணைக்கு ஆட்படுத்தப்படும் நபர்களிடம் அவர்களின் தனிப்பட்ட அனைத்து விவரங்களும் பெறப்படுவதாகவும், ஆதார் விவரம், புகைப்படம், மொபைல் போனின் அனைத்து விவரங்களும் கட்டாயப்படுத்தி காவல்துறையினர் பெறுவதாகும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது போன்ற சட்ட விரோத விசாரணையில் ஈடுபடும் அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கீம், விசாரணை என்ற பெயரில் கோவையில் காவல்துறையினரின் அராஜகம் அதிகமாகி உள்ளதாக குற்றம் சாட்டினார்.



மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்திருப்பது காவல்துறையினரின் பார்வையில் குற்றமாக பார்க்கப்படுவது பெரும் அபத்தமாக இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது குறித்து தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...