கோவை: பொள்ளாச்சியில் புதியதாகச் சொகுசு கார் வாங்கி கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது கிணற்றுக்குள் கார் பாய்ந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சியில் புதியதாகச் சொகுசு கார் வாங்கி கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது கிணற்றுக்குள் கார் பாய்ந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோவை, பொள்ளாச்சி அடுத்த ஏ.நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(67), விவசாயி. இவர் நேற்று புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரில் இன்று குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்வதற்காக வீட்டுக்குள் இருந்து வெளியே காரை எடுத்துள்ளார்.
கார் ஆட்டோ கியர் என்பதால் ஏற்கனவே ரிவர்ஸ் கியரில் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, வீட்டருகே இருந்த 50-அடி கிணற்றில் தவறி விழுந்தது.
அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், கோமங்கலம் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காரை ஓட்டிய ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது எட்டு வயதுப் பேரன் நகுல் கிருஷ்ணன் காயமடைந்து பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
கிணற்றிலிருந்து தீயணைப்புத் துறையினர் காரையும் மீட்டனர். கோமங்கலம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.