கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரியல் எஸ்டேட் ஊழியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை ஜோதி புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (42). இவர் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரி மற்றும் அவரது கணவர் பிரான்சிஸ் சேவியர் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணபிரசாத் சகோதரி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்கு கிருஷ்ணபிரசாத் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிரான்சிஸ் சேவியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று கிருஷ்ணபிரசாத் ஆர்.எஸ் புரம், டி.பி சாமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரான்சிஸ் சேவியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், ஆத்திரமடைந்த அவர் தான் கொண்டு வந்து இருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணபிரசாத்தை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர், ரத்த வெள்ளத்தில் துடித்த கிருஷ்ணபிரசாத் அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.