பொள்ளாச்சியில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.!!

பொள்ளாச்சி: குமரன் நகரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


பொள்ளாச்சி: குமரன் நகரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி குமரன் நகர்ப் பகுதியில், நேற்று முன்தினம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கொடிக்கம்பம் வைக்க முயன்றபோது, அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், செல்வநாககரத்தினம் மற்றும் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொடிக் கம்பங்களை அகற்றினர்.

இந்நிலையில், பொள்ளாச்சி நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், பதாதைகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

மனுவை விசாரித்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...