அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த என்னை இணை அமைச்சராக்கி அழகு பார்த்தது பாஜகவும், பிரதமர் மோடியும் தான் - எல். முருகன் உருக்கம்!

கோவை: அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த என்னை பாஜக தலைவராக்கி, இணை அமைச்சராக்கி அழகு பார்த்தது பாஜகவும் நரேந்திர மோடியும் தான் என்று ஆசீர்வாத யாத்திரை தொடங்கி பாஜகவின் எல். முருகன் உருக்கமான பேசினார்.



கோவை: அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த என்னை பாஜக தலைவராக்கி, இணை அமைச்சராக்கி அழகு பார்த்தது பாஜகவும் நரேந்திர மோடியும் தான் என்று ஆசீர்வாத யாத்திரை தொடங்கி பாஜகவின் எல். முருகன் உருக்கமான பேசினார்.



பா.ஜ.க அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோவையில் மக்கள் ஆசிர்வாத யாத்திரியை மத்திய இணை அமைச்சர் முருகன் இன்று துவக்கினார்.

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:



அருந்ததியர் சமூதாயத்தில் பிறந்த என்னை பிரதமர் நரேந்திரமோடி இணை அமைச்சராக பதவியேற்று அழகு பார்த்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த என்னை மாநில தலைவராக்கியது பா.ஜ.க., தமிழகத்தில் எந்த கட்சியும் இதனை செய்ததில்லை என்றார்.

நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் இந்த சமுதாயம். ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவரை அறிமுகம் செய்ய வேண்டும். ஆனால், என்னை அறிமுகம் செய்யக்கூடாது என்று கங்கனம் கட்டிக் கொண்டது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதனைத்தடுக்க முயன்றனர்.

அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தையும், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டும் திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு 8 கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை. வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்படுகிறத. ஆயுஷ்மான் பாரதம் மூலம் 5 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு திட்டம் கொடுத்துள்ளனர்.



அதேபோல, சமூக நீதியை போற்றுகிறவராக பிரதமர் இருக்கிறார். இந்த மத்திய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 அமைச்சர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 28 அமைச்சர்கள் உள்ளனர்.

நலத் திட்டங்களை செய்துள்ளதால் மக்களிடம் ஆசியை பெறுவதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுவதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பலர் உடனிருந்தனர்.



முன்னதாக, விமான நிலையத்தில் பாஜக சார்பாக மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞரணி உட்பட விமான நிலைய வாசலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தாரை தப்பட்டை முழங்க கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.



Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...