கிணத்துக்கடவு மேம்பாலத்தில் நள்ளிரவில் மதுபோதையில் காரில் உலா.!! ரோந்து பணிக்கு வந்த எஸ்.பி.யிடம் சிக்கிய வாலிபர்.!

கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நேற்று நள்ளிரவு கோவையிலிருந்து பொள்ளாச்சி வரை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.



கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நேற்று நள்ளிரவு கோவையிலிருந்து பொள்ளாச்சி வரை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் கிணத்துக்கடவு மேம்பால பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தார். காரைக் கண்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், அந்தக் கார் அருகே சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் மது போதையில் காரில் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மைக் மூலம் கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் தகவல் கொடுத்தார்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி காரில் மது போதையிலிருந்த வாலிபரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் பொள்ளாச்சி மகாலிங்க புரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் பிரசாத் (வயது 28 ) என்பது தெரியவந்தது

அந்த வாலிபர் மது போதையிலிருந்ததால் அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது

பின்னர், வாலிபர் வந்த காரை பறிமுதல் செய்த காவல்துறை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...