கோவை: கோவையில் 6 வயது முதல் 19 வயது வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணியானது கடந்த 10ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணி வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இக்கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இடைநின்ற குழந்தைகளின் வீட்டு முகவரிக்குச் சென்று, அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, பின்னர் இதற்கான செயலியில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதில் மாணவரின் பெயர், விலாசம், இடைநின்ற விவரங்கள் மற்றும் கொரோனாவினால் தாய், தந்தையர்களை இழந்துள்ளனரா? என்ற விவரமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மேலும், புதியதாக கண்டறியப்படும் இடம் பெயர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனுடைய மாணவர்களையும் அருகாமையிலுள்ள பள்ளியில் சேர்க்கப்படவுள்ளனர். இக்கணக்கெடுப்பு பணியின் அனைத்து விதமான குழந்தைகளும் பயனடைவார்கள்.
இதனிடையே, தற்போது வரை 7 மாற்றுத்திறனுடைய மாணவர்கள் கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.