கோவை பொள்ளாச்சியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத் (38), அதே பகுதியில் லேத் வொர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் பொள்ளாச்சி காந்தி சிலை சிக்னல் அருகே உள்ள தனியார் ஹோட்டல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத இருவர் எடுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, நவ்ஷாத் தனது நண்பருடன் வேறு வாகனத்தில், பைக் திருடிய நபர்களை விரட்டி பிடித்தனர்.

பின்னர், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பைக் திருட்டில் ஈடுபட்ட ஆனைமலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் பட்டுராசா (21) என்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...