கோவையில் தனியார் வங்கிகள் சொத்தை ஜப்தி செய்வதாகக் கூறி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.!!

கோவை: கோவை கணபதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை தனியார் வங்கிகள் ஜப்தி, செய்வதாகவும், தனது சொத்தை மீட்டு, தனக்கும் தனது அப்பாவிற்கும் பாதுகாப்பு தருமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை கணபதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை தனியார் வங்கிகள் ஜப்தி, செய்வதாகவும், தனது சொத்தை மீட்டு, தனக்கும் தனது அப்பாவிற்கும் பாதுகாப்பு தருமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை கணபதி காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் தனியார் வங்கியில் தனது அண்ணன் கடன் வாங்கி இறந்த நிலையில் தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றி ஜப்தி செய்து தனியார் வங்கி என மிரட்டுவதாகக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சுமார் 60 வருடங்களாக அவரது மூன்று சகோதரர்கள் மற்றும் விஜயலட்சுமி ஆகிய நானும் அப்பாவும் அம்மாவும் வசித்து வருகிறோம்.

இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன்பு 3 சகோதரர்களும் மற்றும் தனது அம்மாவும் இறந்து விட்டனர்.

இந்நிலையில் தற்போது தனியார் வங்கியிலிருந்து வந்து மறைந்த தனது அண்ணன் சிவதாஸ் வாங்கிய 75 லட்சம் கடனை திருப்பி செலுத்தாததால் தன்னையும் தனது அப்பாவையும் வீட்டிலிருந்து வெளியேற்றி வீட்டைப் பூட்டி, சென்றுவிட்டதாகவும் மேலும் இதுகுறித்து கேட்டபோது தனது அண்ணன் சிவதாஸ் தங்கள் வீட்டின் அருகில் உள்ள 15 சென்ட் இடத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி இருப்பதாகத் தெரிவித்து தங்களை மிகவும் கேவலப்படுத்தும் வகையில் பேசினர்.

இதற்கு அருகில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவரும் உடந்தையாக அச்சுறுத்தும் வகையில் மிரட்டினார்.

இப்பொழுது தனது அப்பாவையும் எங்கேயோ கூட்டிச் சென்று விட்டனர். அதனால் தனக்கும் தன் அப்பாவுக்கும் தனது உடைமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு தந்து தங்களை வீட்டிலேயே தங்க வைக்க அனுமதி வாங்கித் தருமாறு அவர் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...