தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு மேலும் ஒருவர் கைது.!! சிபிஐ நடவடிக்கை... கைது எண்ணிக்கை 9-ஆக உயர்வு.!!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அதிகாரிகள் உடைய மனைவிகள், என பலரை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து அடித்துக் கொடுமைப்படுத்தி கொடூர சம்பவம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அதிகாரிகள் உடைய மனைவிகள், என பலரை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து அடித்துக் கொடுமைப்படுத்தி கொடூர சம்பவம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி காவல்துறை வழக்கை விசாரணை செய்தனர். அதைத்தொடர்ந்து ஆளுங்கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.அதை அடுத்து சிபிசிஐடி -யிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேலும் ஒருவரான அருண்குமார் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. 

2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணையானது சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையானது, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், தற்போது வரை 9 பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு அண்மையில் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ தரப்பில் ஏற்கெனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சி.பி.ஐ யில் ஆட்கள் பற்றாக் குறையால் வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ விரைந்து முடிக்கத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவத் தயாராக இருப்பதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு சி.பி.ஐ யின் விசாரணைக்கு உதவும் வகையில் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அருண் குமார் என்ற நபரைக் கைது செய்து சி.பி.ஐ அதிகாரிகள் இன்று மாலை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சி.பி.ஐ அதிகாரிகளின் இந்த நடவடிக்கையின் மூலம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வழக்கு விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளதால் இன்னும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. 

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...