கோவையில் தொடரும் செயின் பறிப்பு.!! அடுத்தடுத்து 2-இடங்களில் செயின் பறிப்பு.!!

கோவை: கோவையில் தொடரும் செயின் பறிப்பு அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பெண்களின் கழுத்திலிருந்த தங்க செயினை மர்ம நபர்கள் பறித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தொடரும் செயின் பறிப்பு அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பெண்களின் கழுத்திலிருந்த தங்க செயினை மர்ம நபர்கள் பறித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்து தப்பி ஓடிய வாலிபரை விரட்டி பிடித்த போலிசாருக்கு பாராட்டு குவிகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இன்று கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்ற வாலிபரை காவல்துறை விரட்டி பிடித்து கைது செய்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காவல்துறைக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள காளியா புரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாள். இவர் இன்று காலையில் வேட்டைக்காரன் புதூர் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார்.

அதை நோட்டமிட்ட வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் 5 பவுன்தாலி செயினை பறித்துக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஆனைமலை நோக்கித் தப்பிச் சென்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து செயல்பட்ட ஆனைமலை காவல்துறை சினிமா பாணியில் பைக்கை துரத்திச் சென்றனர்.

அப்பொழுது சுங்கத்தில் உள்ள காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, வேகமாக வந்த ஸ்கூட்டியை காவல்துறை நிறுத்த முயற்சி செய்யும்பொழுது அவர்களுக்குச் சிக்காமல் கேரளா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியை பின் தொடர்ந்து சென்ற போலீசார் உதயகுமார் வளர்ந்தாய் மரம் சக்தி சோயா கம்பெனி அருகில் சென்ற போது வாலிபரை உதயகுமார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தார்.

அந்த வாலிபர் தனது டூவீலரை கொண்டு போலீசாரை மோத முயற்சி செய்தார். சுதாரித்துக் கொண்ட காவலர் உதயகுமார் மீண்டும் அவரை பிடிக்க முயன்றார்.

அப்போது அந்த வாலிபர் மீண்டும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொண்டு பொள்ளாச்சி நோக்கி சென்றார்.

காவல்துறையும் சினிமா பாணியில் விடாமல் துரத்திச் சென்றனர் அந்த வாலிபர் காவல்துறையைக் கீழே தள்ள முயற்சி செய்தார். இருந்தாலும் போலீசார் விடா முயற்சியாக பின் தொடர்ந்து சென்றனர்.

இந்த நிலையில் அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனை அருகே ஆற்றுக்குச் செல்லும் ரோட்டில் அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றான். விடாமல் துரத்திய உதயகுமார் காவல்துறை மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முருகவேல் ஆகியோர் ஆற்றுக்குச் செல்லும் ரோட்டில் வாலிபரை மடக்கிப் பிடித்து காவல்நிலையத்தில் கொண்டு வந்தனர்.



அவரிடமிருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் தீன் என்பது தெரிய வந்தது. பின்பு இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று சாலையில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டி இடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்திலிருந்த செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை, கணபதி அடுத்த தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பவரின் மனைவி சரஸ்வதி ( 75).

இவர் நேற்று மாலை தென்றல் நகர் 80 அடி சாலையில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் சரஸ்வதியிடம் நாங்கள் இந்த ஊருக்குப் புதுசு. நாங்கள் தனியார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து உள்ளோம். இந்த முகவரி எந்த இடத்தில் இருக்கிறது என மிகவும் பாசத்துடன் கேட்டனர்.

பாட்டி அந்த பேப்பரை வாங்கி பார்க்கும் பொழுது சற்று நேரத்தில் கழுத்திலிருந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

இதுகுறித்து சரஸ்வதி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...