கோவையில் ரூ.225 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா.!! தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளதற்கு பி.ஆர்.நடராஜன் எம்பி வரவேற்பு.!!

கோவை: கோவை மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டிருப்பதற்கு பி.ஆர்.நடராஜன் எம்பி வரவேற்பு தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டிருப்பதற்கு பி.ஆர்.நடராஜன் எம்பி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் நிதிநிலை சிரமங்களை உள்வாங்கிக்கொண்டு குறுகிய கால பயன்கள், நீண்ட கால பயன்கள் என்கிற வகையில் நல்லதொரு நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

குறிப்பாகக் கோவை மாவட்டத்தை முதன்மைப்படுத்தி ரூ 225 கோடி மதிப்பீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசின் சார்பில் அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்குக் கோவை மக்களின் சார்பில் வரவேற்கிறோம். இத்தகைய அறிவிப்பினால் நேரிடையான வேலை வாய்ப்பு மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு எனப் பல்லாயிரம் பேர் பயனடைவார்கள்.

மேலும், மகளிர் சுய உதவிக்குழுவிற்கான கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு கோவிட் கடன் பெட்ரோல் மீதான வரியில் 3 ரூபாய் குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் உண்மையில் சாதாரண ஏழை எளிய உழைப்பாளி மக்கள் நேரிடையாக பயன்பெறும் திட்டங்களாகும்.

இத்தகைய நல்லதொரு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சருக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற வகையிலும், கோவை மக்களின் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...