கோவை மாவட்டத்தில் கொரோனா விதி மீறியவர்களுக்கு ரூ.5.58 கோடி அபராதம்.!!

கோவை: கொரோனா விதி மீறியவர்களுக்கு ரூ.5.58-கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.


கோவை: கொரோனா விதி மீறியவர்களுக்கு ரூ.5.58-கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, முகக்கவசம் அணியாத பொதுமக்கள், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காத நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத நிறுவனங்கள், பொதுமக்களுக்கு இதுவரை ரூ.5.58-கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,``முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களுக்கு ரூ.200-அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை ரூ.5-கோடியே 58-லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது'' என்றார்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...