கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா பரவல் 36.72-சதவீதமாகக் குறைந்தது.

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவல் 36.72-சதவீதமாகக் குறைந்து உள்ளது. அதேநேரத்தில் ஊரக பகுதிகளில் சில இடங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் அலையின் போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 70-சதவீதம் முதல் 75-சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில் வசித்தனர்.
பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா 2வது அலையிலும் கோவை மாநகராட்சி பகுதியில்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது.
ஆரம்பத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 65-சதவீதம் பேர் மாநகராட்சி பகுதியிலிருந்தனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 5-ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டனர்.
இதன்மூலம் தொற்று பாதித்தவர்கள் விரைந்து கண்டறியப்பட்டு, அவர்களைத் தனிமைப்படுத்தப்பட்டதால் பாதிப்பு விரைவாகக் குறைந்தது.
இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கொரேனா பரவல் 36.72-சதவீதமாகக் குறைந்து உள்ளது. இது கடந்த 2-வாரங்களுக்கு முன் 40-சதவீதத்திற்கும் மேல் இருந்தது.
அதே நேரத்தில் மொத்த பாதிப்பில் ஊரக பகுதியான காரமடையில் கொரோனா பரவல் 7.48-சதவீதமாகவும், துடியலூரில் 10.42-சதவீதமாகவும், சூலூரில் 5.80-சதவீதமாகவும், ஆனைமலை பகுதியில் 5.63-சதவீதமாகவும், மதுக்கரை பகுதியில் 5.21-சதவீதமாகவும்.
கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.