திருமூர்த்தி அணையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பாசன நீர் கொண்டு வரும், பிரதான வாய்க்காலில் உடைப்பு.!! தண்ணீர் நிறுத்தப்பட்டுச் சீரமைப்பு பணிகள் தீவிரம்.!!

கோவை: திருமூர்த்தி அணையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பாசன நீர் கொண்டு வரும், பிரதான வாய்க்காலில் உடைந்ததால், தண்ணீர் நிறுத்தப்பட்டுச் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: திருமூர்த்தி அணையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பாசன நீர் கொண்டு வரும், பிரதான வாய்க்காலில் உடைந்ததால், தண்ணீர் நிறுத்தப்பட்டுச் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,068 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், நான்காம் மண்டல பாசனத்திற்குக் கடந்த ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் பி.ஏ.பி பிரதான வாய்க்கால் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தற்போது அணையிலிருந்து வினாடிக்கு, 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு, வாய்க்காலில் சென்று கொண்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் பொள்ளாச்சி அருகே உள்ள கெடி மேடு பகுதியில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.

வாய்க்கால் உடைப்பைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வாய்க்காலில் ஏற்பட்ட ராட்சத துளையை அடைத்து கால்வாயைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால், பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் பல இடங்களில் வாய்க்காலில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அனைத்து பகுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...