வால்பாறையில் நகைக்கடை உரிமையாளர் மற்றும் மருந்தக உரிமையாளர்களிடம் காவல்துறை ஆய்வாளர் ஆலோசனை!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் சார்பில் சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கும் வண்ணம் வால்பாறையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் சார்பில் சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கும் வண்ணம் வால்பாறையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதேபோல, வால்பாறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடைகள் உள்ளன. மேலும், வால்பாறை பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட மருந்தகம் உள்ளன.



இந்த நிலையில், தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடைகள் உரிமையாளர்களுக்கும் வால்பாறையில் உள்ள மருந்தக உரிமையாளர்களுக்கும் வால்பாறை காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்க நகை அடகு கடையில் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும், தங்க நகைகள் அடகு, விற்பனை செய்ய வந்தால் அவர்களிடம் முறையாக முகவரி, ஆதார் அட்டை, செல்போன் நம்பர் பதிவு செய்ய வேண்டும் என்றும் சந்தேகத்திற்கு ஏற்ப நபர்கள் தங்க நகை வாங்க விற்க வந்தால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், ஒவ்வொரு நகை கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், வால்பாறையில் உள்ள மருந்தகம் கடைகளில் சட்டவிரோதமாக மருந்துகள் வாங்க வந்தால் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், டாக்டர் அறிவுறுத்தலின்படி மருந்துகளை விற்க வேண்டும், கொரோனா காலத்தில் அதிகப்படியான மருந்துகள் வாங்கினால் மருத்துவத் துறைக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் துணை ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் நிலைய காவலர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...