கோவை கிணத்துக்கடவு பகுதிக்கு வந்துள்ள 263 புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு..! பொதுமக்களுக்கு வழங்கும் பணி தீவிரம்!

கோவை: கோவை கிணத்துக்கடவில் மேலும் 263 புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு வந்துள்ளதால், வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை: கோவை கிணத்துக்கடவில் மேலும் 263 புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு வந்துள்ளதால், வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 1089 பேர் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு கேட்டு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பத்து இருந்தனர். பின்னர் பல்வேறு கட்ட விசாரணை நடத்தியதில் 765 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க தகுதி பெற்றனர்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களில் புதிதாக அச்சிடப்பட்டு முதற்கட்டமாக 443 புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு வந்ததையடுத்து, பொதுமக்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வந்தது.



இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று மேலும் 263 புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளது. இதனால் புதிதாக வந்த ஸ்மார்ட் கார்டுகளை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டு, புதிய ஸ்மார்ட் கார்டு வாங்க வரும்போது ஆதார் அட்டை கொண்டு வந்து ஆவணமாக காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று வட்ட வழங்கல் அலுவலர் முத்து தெரிவித்துள்ளார்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...