கோவை: வால்பாறையில் பல கோடி செலவு செய்து பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்து கிடக்கும் படகு இல்ல பணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் பொருளாதாரத்தை மேம்படுத்த சுற்றுலா துறை வளர்ச்சியடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் ஒரு கட்டமாக, வால்பாறை நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து வால்பாறை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே தாவரவியல் பூங்காவும் ஸ்டான்மோர் சாலையில் படகு இல்ல பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அவசர அவசரமாக இரண்டு பணிகளும் முடிவடையும் முன்பே துவக்கி வைக்கப்பட்டன. இதில் தாவரவியல் பூங்கா பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்றொரு திட்டமான படகு இல்ல பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டன.

இதன் காரணமாக படகு இல்லத்தில் கழிவுநீர் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகின்றன. பலகோடி ரூபாய் செலவு செய்து துவக்கப்பட்ட படகு இல்ல பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்து கிடக்கிறது.

எனவே, கிடப்பில் உள்ள படகு இல்ல பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் படகு இல்லத்தில் குப்பைகள் கழிவுகள் சேராமல் தடுக்க மாற்று திட்டத்தை ஏற்படுத்துமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.