'எஜமானை கடிக்க வந்த பாம்பு' காப்பாற்ற உயிரைவிட்ட நாய் - கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்.!!

கோவை: கோவையில் தன்னை வளர்த்த எஜமானரை கடிக்க வந்த பாம்பிடம் சண்டை போட்டு உயிரை விட்டுள்ளது அந்த வீட்டு வளர்ப்பு நாய். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.


கோவை: கோவையில் தன்னை வளர்த்த எஜமானரை கடிக்க வந்த பாம்பிடம் சண்டை போட்டு உயிரை விட்டுள்ளது அந்த வீட்டு வளர்ப்பு நாய். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கோவையில் வீட்டில் வளர்த்து வந்த செல்லமான பொமேரியன் நாய் வீட்டுக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பை விடாமல் தடுத்ததில், பாம்பு கடித்து நாய் பரிதாபமாக உயிர் விட்டது.

தொடர்ந்து குரைத்து குடும்பத்தாரை விழிப்படையச் செய்து பாம்பிடம் இருந்து குடும்பத்தைக் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஜி.என்.மில்ஸ் வைலட் கார்டன் பகுதியில் உள்ள யமுனா வீதியில் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார் சுரேந்தர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அவர் வீட்டில் வளர்த்து வரும் 12 வயதுடைய பொமரேரியன் நாய் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.

நீண்ட நேரமா நாய் குரைத்துக் கொண்டே இருந்ததைக் கண்டு சுரேந்தரின் தாயார் கதவைத் திறந்து வெளிய வந்து பார்த்துள்ளார். அப்போது காலுக்கு அடியில் 4 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று கடந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு அடியில் சென்றுள்ளது.

அதனைப் பார்த்து மீண்டும் அந்த நாய் குரைத்துக் கொண்டே காரின் அடியிலிருந்த பாம்பின் வாலை பிடித்து இழுத்துள்ளது. அப்போது திடீரென அந்த பாம்பு திரும்பி நாயின் கண் மற்றும் காதில் கொத்தியுள்ளது.

இதில் வலியால் துடித்த நாய் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது. இதைக் கண்டு அச்சமடைந்த சுரேந்தர் உடனடியாக ஸ்நேக் ரெஸ்க்யூ குழுவினர்க்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சுமார் 12 மணியளவில் அங்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் அவர்கள் வீட்டின் மாடிப் படிக்குக்குள் புகுந்திருந்த பாம்பை ஒரு டப்பா மூலம் பிடித்து அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட எடுத்துச் சென்றார்.

பிடிபட்ட பாம்பு 4 அடி நீளம் இருந்த கண்ணாடி வீரியன் வகையைச் சேர்ந்தது. என்றும், இது அதிக விசம் கொண்ட பாம்பு என்றும் தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டவசமா வீட்டில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்ற போதும் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் அவர்களின் நாய் பாம்பு கொத்தி இறந்தது. அவர்களில் வீட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...