வால்பாறையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு!

கோவை: வால்பாறையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதி ஒருவழி சாலையாக உள்ளது. சாலையோரம் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு வருவதால் போக்குவரத்துக்கு அவ்வப்போது இடையூறாக உள்ளது.

இந்நிலையில், வால்பாறை குடியிருப்புப் பகுதியில் வீடுகளில் வளர்க்கும் மாடுகளை காலையில் மேய்ச்சலுக்காக அனுப்பும் பொழுது, சுமார் 50க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றித் திரிகிறது. சாலையின் குறுக்கே நின்று கொண்டும் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் காணப்படுவதால் அவ்வப்போது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.



இதனால் வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து மாடு அடைக்கும் பட்டியில் அடைக்கப்பட்டுள்ளது இதில் மாடுகளின் உரிமையாளர்கள் அபராதத்தை கட்டி மாடுகளை மீட்டுச் செல்ல அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், மாடுகளை சாலையில் சுற்றி திரிந்தால் கோவையில் உள்ள கோ மாதா நிலையத்திற்கு அனுப்பப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...