கொரோனா பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ள பொள்ளாச்சி மாட்டுச்சந்தை: விற்பனை முடக்கத்தால் வியாபாரிகள் வேதனை.!!

கோவை: கொரோனா பரவல் காரணமாகப் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளதால், விற்பனை முடக்கத்தால் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: கொரோனா பரவல் காரணமாகப் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளதால், விற்பனை முடக்கத்தால் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு பகுதியிலுள்ள மாட்டுச்சந்தையில், வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் விற்பனை நடப்பது வழக்கம்.

இங்குக் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், கோவை மாவட்ட ஆட்சியர் பொள்ளாச்சி மாட்டுச் சந்தையை, மூட உத்தரவு பிறப்பித்தார்.



இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மாட்டுச்சந்தையில் விற்பனை நடைபெறவில்லை. இதனால் மாடுகளை விற்கவும் வாங்கவும் முடியாமல் வியாபாரிகளும் விவசாயிகளும் தவித்து வருகின்றனர்.

மேலும், பொள்ளாச்சி மாட்டுச் சந்தை மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியுள்ளது என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...