கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையிற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையிற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறைக்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை மானாம் பள்ளி பொள்ளாச்சி உலாந்தி என 4-வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் வனக்காவலர்கள், வனவர்கள், வனச்சரகர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் வனப்பகுதியில், ரோந்து பணியை மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தினமும் சென்ற இடங்கள் நேரம் வனவிலங்குகளின் கால்தடங்கள் நேரில் பார்த்தது அப்பகுதியில் உள்ள மரங்கள் பழ மரங்கள் பூ மரங்கள் செடிகள் தாவரங்கள் ஆகியவை பற்றிய குறிப்புகள் சேகரிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் வனத்துறை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக ஆனைமலை புலிகள் காப்பக அட்ட கட்டி பயிற்சி மேலாண்மை மையத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பக அட்ட கட்டி பயிற்சி மைய உதவி வனப்பாதுகாவலர் செல்வம் அவர்களின் பணிகள் பற்றி ஒளிப்படக் காட்சி மூலம் விவரித்தார்.
விளக்க உரைக்குப் பின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பின்னர் பேசிய உதவி வனப்பாதுகாவலர் செல்வம் அனைத்து வளங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்து அங்குள்ள வன உயிரினங்கள் மரங்கள் செடிகள் கொடிகள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் கண்காணிப்பு கேமரா பயன்படுத்தும் முறை இயக்கும் முறை பற்றித் தெளிவாக விளக்கம் அளித்தார். இந்தக் கூட்டத்தில் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் மானாம் பள்ளி வனச்சரகர் மணிகண்டன் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி மற்றும் வனவர்கள் காவலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.