கொரோனா நோயாளியிடம் தனியார் மருத்துவமனை பெற்ற கூடுதல் கட்டணம் திருப்பி அளிப்பு.!! கோவை மாவட்ட ஆட்சியர் சமீரின் நடவடிக்கை.!!

கோவை: தனியார் மருத்துவமனை கட்டணத்தைத் தமிழக அரசு நிர்ணயம் செய்து கொரோனா காலத்தில் அறிவித்திருந்தது. இது குறித்து தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருந்தார்.


கோவை: தனியார் மருத்துவமனை கட்டணத்தைத் தமிழக அரசு நிர்ணயம் செய்து கொரோனா காலத்தில் அறிவித்திருந்தது. இது குறித்து தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருந்தார்.

இதன்படி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இன்று 4 லட்சத்து 48 ஆயிரம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை இடமிருந்து நோயாளிக்கு ஆட்சியர் சமீரன் உத்தரவின் பெயரில் மீண்டும் திருப்பி அளிக்கப்பட்டது.

கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு வசூலித்த கூடுதல் கட்டணம் ரூ.4.48 லட்சம் நோயாளியிடம் திருப்பி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது.

அந்தக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது பொது மக்கள் புகார் அளிக்கும் விதமாகக் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாகச் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் கூடுதல் கட்டணம் பெற்றிருந்தது தெரியவந்தால் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை நோயாளிக்குத் திரும்ப வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டு வருகிறது.

அதன்படி கோவையில் இதுவரை 19 பேருக்குக் கூடுதல் கட்டணம் திரும்பப் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா உக்கடம் புறவழிச் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுள்ளார்.

இவருக்கு அரசு நிர்ணயித்த தொகையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

ஆட்சியரின் அறிவுறுத்தல் படி கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து 990 நோயாளியிடம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சி பொங்க மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...