திருப்பூர்: வனம் காக்கும் யானைகளை பாதுகாக்க மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

யானை இல்லையேல், காடில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர் என பல்வேறு வனக்கோட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதன்படி, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் கோட்டம், உடுமலைப்பேட்டை, 9/6ல் உள்ள வனசோதனைச் சாவடியில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
காடு வளமாக இருக்க, யானைகளின் பங்களிப்பு, மனிதர்களின் அலட்சியத்தால் யானைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் இறப்பு, யானைகளின் வலசை பாதைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்பு காரணமாக அவை ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவது, மனித - யானை மோதலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் விளக்கினார்.
உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது..குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.