கோவை: மருத்துவ கழிவுகளைக் கல்லூரி வளாகத்துக்குள் கொட்டியதால், துர்நாற்றத்தால் பேராசிரியர்கள் அவதியடைந்துள்ளனர்.

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று அதிகரித்தபோது இக்கல்லூரி சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து கல்லூரிகள் செயல்படாத காரணத்தால் மீண்டும் இரண்டாம் அலையின் போதும் இக்கல்லூரி மருத்துவமனையாகச் செயல்பட்டது.
அப்பொழுது நூற்றுக்கணக்கான நோயாளிகள் இங்குத் தங்கி சிகிச்சை பெற்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனைத்து நோயாளிகளும் இக்கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், இந்த நோயாளிகளின் கழிவுகள், அவர்கள் பயன்படுத்திய துணிகள், மருத்துவ கழிவுகள், மீதமான உணவு பொட்டலங்கள் என அனைத்து கழிவுகளையும் கல்லூரி வளாகத்தில் மலைபோல் கொட்டி விட்டனர்.

இத்தனை நாட்களாகக் கல்லூரி இயங்காததால் இங்கு யாரும் வரவில்லை. தற்பொழுது பேராசிரியரும் கல்லூரிக்கு வந்து இணைய வழியாக மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் பேராசிரியர்கள் அனைவரும் கல்லூரிக்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால் இந்த மருத்துவ கழிவுகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கழிவுகள் சிதறி கிடைக்கிறது.
இதுகுறித்து உடுமலை நகராட்சி இடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் இந்த கழிவை அகற்ற வில்லை எனவே இந்த மருத்துவக் கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.